முஸ்லீம்கள் மீது தாக்குதல் - சிங்கள காடையர்களுக்குப் பிணை


அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது வைன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லீம்களின் பெருமாளவான சொத்துக்களைச் சூறையாடியும் சேதமாக்கியும் வெறியாட்டம் நடத்திய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கியது முஸ்லீம்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபாகரன் படம் வைத்திருந்தார்கள் என்று தமிழர்களையும் இனவாதக் கருத்துக்களைத் தூண்டுகிறார்கள் என்று முஸ்லீம்களையும் பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும் சிங்கள பேரினவாதம் ஊரடங்கு வேளையில் முஸ்லீம்கள் மீது சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டத்தை கண்டும் காணாமல் விட்டதோடு கைது செய்தவர்களையும் சாதாதரண வழக்குகளின் கீழ் பதிவுசெய்து அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளமை சிங்களத்தின் கோர இனவாத  முகத்தையே காட்டிநிற்கின்றது.

No comments