மசூதி மீது மர்ம நபர்கள் கடும் தாக்குதல்!

ஜெர்மனின் வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹெகன் நகரில் உள்ள மசூதி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, எனினும் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை என்று மசூதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் புகைக்குண்டு போட்டதோடு, மசூதி நுழைவாயில் கடும் சேதமாக்கியதோடு , தளபாடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் ஒளிப்பட கருவியினூடாக  சந்தேக நபர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் துரிதமாக இறங்கியுள்ளனர்,

இந்த மசூதி இஸ்லாமிய சமுதாய தேசிய பார்வை (IGMG), ஜெர்மனியின் மிகப் பெரிய முஸ்லீம்-துருக்கிய சங்கங்களில் ஒன்று என்று அறியமுடிகிறது.

No comments