நெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து - ஒருவர் உயிரிழப்புநெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் பட்டா ரக வாகனமும் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் முச்சக்கர வண்டி சாரதியான நெடுங்கேணியை சேர்ந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்
காயமடைந்த இருவரும் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments