டிரம்ப் உடன் கருது மோதல்! பதவி விலகிய பாதுகாப்பு அமைச்சர்!

அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக்காவின்  உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக  பதவி வகித்து வந்த கிர்ஸ்ட்ஜென் நீல்சென் பதவி விலகியுள்ளார்,

அமெரிக்கா வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது போன்ற துன்புறுத்தும் அமெரிக்க அதிபர்  டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார்.

எனினும் இது போன்ற திட்ட்ங்களில் விருப்பம் இல்லாததினால் அவரின் செயல்பாடுகளை குறைத்துக்கொண்டபோது டிரம்ப் உடன் கருது முரண்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments