உலக வாழ் தமிழ் மக்களே நியூசிலாந்து அரசிடம் முறையிடுங்கள்!

நண்பர்களே இந்த தகவலை அவசரமாக பகிருங்கள் இயன்றவரை வாக்களியுங்கள்!

அன்பான தமிழ் உறவுகளுக்கு அழைப்பு !

ஈழத்தமிழர் ஆயுதப்போர் 2009 ம் ஆண்டு இனப்படுகொலை மற்றும் நீதிக்கு புறம்பான யுத்தத்தின் மூலம் இலங்கை அரசு முடித்துக்கொண்டது. இருப்பினும் சர்வதேச அரங்கில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக பலதரப்பு பிரதிநிதிகளும் முயறசிக்கின்ற வேளையில் , சர்வதேச ரீதியில் எமக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே கிடைத்துவருகிறது , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் கூடுதலாக கொண்ட உறுப்பினர்களின் ஆதரவை தமிழர் தரப்பு பெருகொள்வதில் எங்கேயோ பின்தடங்கள் இருக்கிறது என்பது தெளிவு , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் அதிகம் கொண்ட உறுப்புநாடான நியூசிலாந்து நாட்டு அரசிடம் தமிழர் அமைப்பு ஒன்று தமிழர் இனஅழிப்பு மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த முறைப்படடை நியூசிலாந்து அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின் .

இந்த முறைப்பாட்டை அதிகளவு மக்கள் சமர்ப்பிக்கவேண்டும். இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி தங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் Engage actively with UN Human Rights Council on war crime committed by Sri Lanka - Petition request பக்கத்தை உருவாகியுள்ளது .

நியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் அளவு குறைவு என்பதால் இதுவரை 305 Petition மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது . இதில் பாதிக்கப்பட் ட மக்கள் உலகில் எங்கிருந்தும் Petition request கொடுக்கலாம் , எதிர்வரும் 30ம் திகதியுடன் முடிவடையவுள்ள காலஎல்லைக்குள் குறைந்தது 1 மில்லியன் முறைபாடுகளாவது பதிவுசெய்யப்படவேண்டும் . எனவே அன்பு உறவுகளே உங்கள் தமிழின நன்மைகருதி நீங்கள் இதுவரை செய்த பணியுடன் இதையும் ஒரு அவசர விடயமாக கருதி இயன்றளவு Petition ஐ பதிவிடுங்கள்.

உங்கள் பெயர் ஈமெயில் முகவரி மட்டுமே தேவை,
நியூசிலாந்து அரசு தந்த இந்த நல்லசந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக முறைப்பாட் அழுத்தி ஐ நா சபையில் அவர்களின் ஆதரவை பெற அனைவரும் ஒன்றிணைவோம் .
கீழே உள்ள இணைப்பில் மஞ்சள் நிற பகுதியில் Signatures are now being accepted உள்ள sign Petition பகுதியை அழுத்தி உங்கள் முறைப்படடை பதிவுசெய்யுங்கள் .

உங்கள் 1 நிமிடம் பாதிக்கப்பட்ட எம் இனத்துக்கு பெரும் மாற்றத்தை பெற்றுத்தரும் .
"தமிழின அழிப்புக்கு நீதிவேண்டி போராடுவோம் "

Click the below link to sign the petition, Thank you.

https://www.parliament.nz/en/pb/petitions/document/PET_86202/petition-of-siva-vasanthan-for-federation-of-tamil-associations?signed=true

No comments