குண்டுவெடிப்பையடுத்து பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டு பதற்ற நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

பொது இடங்களில் மக்கள் குழுமி இருப்பதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments