குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி - 475 பேர் காயம்


இன்று காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை, சங்ரிலா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி , நீர்கொழும்பு கட்டான மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 140 பேர் உயிர் இழந்துள்ளனர். 475 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் - 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை - 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை - 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி  ​தேவாலயம்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

No comments