தீ பற்றியது! களஞ்சியறை எரிந்து நாசம்!

வவுனியா மாவட்டம் பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள விபுலானந்தாக கல்லூரியின் களஞ்சிய அறையில் தீடீரென தீப்பற்றியதால் அக்களஞ்சிய  அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாடசமாகியுள்ளது.

அக்களஞ்சியறையில் கணனிகள், கதிரைகள், சமையல் பாத்திரங்கள் என பல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

தீபற்றிக்கொண்ட சம்பவத்தை அறிந்த பாடசாலை சமூகத்தினர் பண்டாரிக்குளம் காவல்நிலையத்திற்கும் தீயணைப்பு பிரிவினருக்கம் தகவல் அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பாடசலை சமூகத்தினர் இணைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுள்ககுள் கொண்டு வந்துள்ளனர்.

No comments