விமான எதிர்ப்பு ஆயுதத்துடன் படை அதிகாரி கைது!


விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், அதற்குரிய 73 சன்னங்கள் மற்றும் 5.81 மில்லி மீற்றர்களைக் கொண்ட 273 ரவைகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றிய காவல்துறையினர் ராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

பதுளை குருவிதென்னை என்ற இடத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்ட போதே மேற்படி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிப்பொருட்களின் உரிமையாளரென்று கருதப்படும் இராணுவ உயர் அதிகாரியை கைது செய்த காவல்துறையினர் அவரை மகியங்கனை மாவட்ட நீதிபதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர் எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மன்னார் பெரியமடு இராணுவ முகாமில் சேவையாற்றும் 35 வயதான வை.எம்.விஜயசூரிய என்ற இராணுவ உயர் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த ராணுவ அதிகாரி விடுமுறையில் வீடு சென்று தங்கியிருந்தார் என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments