வருகின்றது சித்திரவதைகளிற்கு எதிரான குழு?


சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

எனினும், குழுவின் பயண நாள்கள் தொடர்பான விவரங்கள், மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் நாள் வரை நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன், காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு தற்போது மேலதிகமாக இலங்கை, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

No comments