இரணைமடுக்குளத்தில் மேலதிக சிறுபோக பயிர்செய்கை!


இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க ஆளுநர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் 2019ஆம் ஆண்டின் சிறுபோகத்தின்போது 15 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பிற்கு பின் அதிகரிக்கப்பட்ட நீரால் விவசாயிகள் நன்மை பெறவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இன்றைய நீர்மட்டம் 33 அடி 10 அங்குலம் எனவும் இருக்கும் நீரை நெற்செய்கை ஏற்று நீர்ப்பாசனம் குடிநீர் தேவை என்பவற்றிற்கு வினைதிறனாக பயன்படுத்துவோம் என ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் வருட சிறுபோகத்தில் 15,500 ஏக்கர் நெற் செய்கையும், 500 ஏக்கர் வயல் நிலத்திலான உப உணவு செய்கைக்கும் , 600 ஏக்கர் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன செய்கைக்கும் நீர் பகிரப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த குளத்தின் அணைக்கட்டினை உயர்த்துவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு உபரி நீரை குடிநீராக பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அதனை அவசர அவசரமாக முடக்க ஏதுவாக சிறுபோக விவசாய நடவடிக்கைகளினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments