ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது மகஜர்?


ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களில் ஒரு சாரார் வடமாகாண ஆளுநரிடம் மகஜர்களை கையளித்துள்ளனர்.

பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள் இன்றைய தினம் தமது முறைப்பாடுகளை செய்யலாமென தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்றைய தினம் (13) நடைபெற்றிருந்தது.

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பின் போதே பொதுமக்களுடன் பொதுமக்களாக ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களில் ஒரு சாரார் வடமாகாண ஆளுநரிடம் மகஜர்களை கையளித்துள்ளனர்.
இதனிடையே இலங்கை ஜனாதிபதியின் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள குழுவில் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனும் உள்ளடங்கியுள்ளமை தெரிந்ததே.

No comments