முற்றவெளி பேரணியிலும், மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள அழைப்பு


வடக்குகிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும்  கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பில் விக்னேஸ்வரன் அறிக்கைஒன்றை இன்று புதன்;கிழமை வெளியிட்டுள்ளார். 

அடிக்கடி நடைபெறும் கதவடைப்பு போராட்டங்களும் ஆர்ப்பாட்ட பேரணிகளும் மக்களின்  சகஜ வாழ்க்கையை பாதித்து பொருளாதார செயற்பாடுகளையும்,நாளாந்த வருவாய்களையும் பாதிக்கும் என்ற போதிலும் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக்கருதாமல் எமக்கான உரிமைகளும் நீதியுமே முக்கியம் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சாத்வீக போராட்டங்கள்தான் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளையும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது. எமது மக்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் இத்தகைய போராட்டங்கள் தான் ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச சமூகத்தினால் உட்படுத்தப்பட்டுள்ளது.  

அரசாங்கம் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருகின்ற போதிலும் நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்கள் தான் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகத்தின் மனசாட்சிக்கதவுகளைத்தட்டி எழுப்புவன. அவ்வாறான தொடர் போராட்டங்களே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் மாற் றுநடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது ஐ.நா.தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றதவறி இருக்கின்ற நிலையில் இலங்கையைப்பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் அல்லது சர்வதேச நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட தகுந்த பொறிமுறை ஊடாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும்,அதேவேளை ஐ. நா மனிதஉரிமைகள் சபை தனது அலுவலகத்தை இலங்கையில் திறந்து விசேடபிரதிநிதி ஒருவரையும் நியமிக்கவேண்டும் என்றும் கேட்டுவருகின்றோம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்களின் போராட்டங்களிலும் இந்தக்கோரிக்கைகளே விடுக்கப்பட்டன. இந்தக்கோரிக்கைகள் இன்று சர்வதேச ரீதியாகவும் விடுக்கப்பட்டு வருகின்றமை உங்கள் போராட்டத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது.சிலர் இந்தப் போராட்டங்களின் போது சோர்வடைந்துள்ளதையும் பார்த்துள்ளேன். ஆனால் இன்று நிலைமை சீரடைந்துவருகின்றது. சர்வதேச நாடுகள் ஓரளவு விழித்துக்கொண்டிருப்பது இதற்கு ஒருகாரணம். மனிதஉரிமைகள் சபையின் ஆணையாளர் சில தினங்களுக்குமுன்னர் விடுத்துள்ளஅறிக்கையில் இவை தொடர்பில் சிலசாதகமான விடயங்களைப்பரிந்துரைத்துள்ளார். அதேபோல சர்தேசநீதிபதிகள் ஆணைக்குழுவும் இலங்கை விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குகொண்டுசெல்லப்படுவதுஉட்படநாம் கோருகின்ற  பலவிடயங்களை வலியுறுத்தியுள்ளது. 

ஆகவே,மிகவும் முக்கியமான ஒருகாலகட்டத்தில் நாம் இன்றுநிற்கின்றோம்.  அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டமும்நீதிக்கானபோராட்டங்களும் இன்று எழுச்சி அடைந்திருக்கின்றது.  குறிப்பாக எமது இளம் சமுதாயத்தினரும் பெண்களும் தலைமை ஏற்றுமேற்கொண்டுவரும்  தொடர் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்துசெயற்படும் விதம் எனக்குமிகுந்தஉற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கின்றது. பெண்களும் இளம் சமுதாயத்தினரும் சாத்வீகவழிகளில் அடைக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டிய பலஉதாரணங்களைஉலகவரலாறுகளில் காண்கின்றோம். வடக்குகிழக்கில் இன்றுஏற்பட்டுவரும் புதியபோராட்டபரிமாணத்தைகவனத்தில் எடுத்து ஐ. நா மற்றும் சர்வதேசசமூகமும் உரியநடவடிக்கைகளைஎடுக்கும் நிலைமைநிச்சயமாகஉருவாகும் எனஎதிர்பார்க்கலாம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்புக்களும் பல்கலைக்கழகமாணவர்களும் கடந்தகாலங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன்  மிகச் சிறந்தமுறையில் போராட்டங்களைஒழுங்கமைத்து இருந்தார்கள். குறிப்பாகக்கிளிநொச்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டபோராட்டம் பலரதும் கவனத்தைஈர்த்திருக்கின்றது. கிளிநொச்சிபோராட்டத்துக்குபொதுமக்களும் வர்த்தகர்களும்வழங்கியபேராதரவுக்குஎனதுநன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். 

அதேபோல 16ம் திகதிபல்கலைக்கழகமாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டமும் மட்டக்களப்பில் 19ம் திகதிநடைபெறும் போராட்டமும் முக்கியமானவை. இந்த இரண்டுபோராட்டங்களுக்கும் உங்கள் முழுமையானஆதரவைவழங்கிஎமதுமக்களின் நீதிக்கானகுரல் ஐ. நா வரைகேட்பதற்குஅணிதிரள்வீர்கள் என்றுநம்புகின்றேன். நானும் இந்த இரண்டுபோராட்டங்களிலும்உங்களில்ஒருவனாகக்கலந்துகொள்ளவிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

No comments