ஜநா சும்மா! மைத்திரிக்கு விளக்கிய கூட்டமைப்பு?


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்தை கூட்டமைப்பு இணைந்தே வரைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

ஜனாதிபதியுடன் முட்டிமோதி செயற்பட்டு, ஜெனீவா விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் ஐ.தே.க அரசு பகிராமல் செயற்பட்டதால் ஜனாதிபதி எந்த தகவலையும் அறிந்து கொள்ள முடியாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து- மேற்கு நாடுகள், அரசு, தமிழரசுக்கட்சி இணைந்து எப்படியான தீர்மானத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை- ஜனாதிபதிக்கு கூட்டமைப்பே தெளிவுபடுத்தியுள்ளது. 

சில நாட்களின் முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையா நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதாகவும், இலங்கை ஏற்கனவே வாக்களித்தவற்றை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்களித்தாலே போதுமென்றும் தமிழரசுக்கட்சி அதற்கு பதிலளித்துள்ளது.

சில திருத்தங்களுடன் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்தததையடுத்து ஜனாதிபதியின் பிரதிநிதிகளும், அரசின் பிரதிநிதிகளும் இணைந்து, மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதென முடிவாகியுள்ளது.

இதன்பின்னரே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில்  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, கலாநிதி சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழு செல்வதென தீர்மானமாகியது.
ரணில் சார்பில் சுமந்திரன் செல்லவுள்ளமை தெரிந்ததே.

No comments