7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை;ராகுல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 13) நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கிண்டியிலுள்ள லி மெரிடியன் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்,

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுவர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது
“எனது தந்தை படுகொலை செய்யப்பட்டது தனிப்பட்ட முறையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் இழப்புதான். ஆனால் இது சட்டரீதியான பிரச்சினை. சட்டப்படி என்ன முடிவு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம். சிறையில் உள்ள 7 பேர் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் எனக்கு இல்லை. அவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.hb

No comments