ஊடகவியலாளரின் வீடு உடைத்து திருட்டு - பின்னணியில் கறுப்புச் சட்டைக்காரர்களா ?

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் சிறந்த ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டில் 12.03.19 அன்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது பொலீசார் புலன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளை ஊடகங்களுக்கு வெளிக்கொணர்ந்து ஊடக சேவையினை செய்துவந்த ஊடகவியலளருக்கு மேலும் பின்னடைவினை ஏற்படுத்தும் முகமாக இந்த கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் கிளநொச்சியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த குறித்த ஊடகவியலாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் அடியாட்கள் எனக் கூறப்படும் கறுப்புச் சட்டைக்காரர்களால் கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments