திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று உயிருடன் திரும்பிய ஆராச்சியாளர்!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 51 வயதான ரெய்னர் சிகிம்ஃப் திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று அதிர்ஷ்டவசமாகத் உயிர் தப்பித்துள்ளார்.இவர் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். "Sardine Run" எனப்படும் சார்டின் மீன்களின் இடமாற்றத்தைக் கடலடியில் அவர் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.அப்போது சார்டின் மீன்களை விழுங்கியவாறு நீந்தி வந்த திமிங்கிலம் ஒன்று, சிகிம்ஃபையும் விழுங்கியது.அந்தத் திமிங்கிலத்தின் வாயின் வெளியே தமது கால்கள் தொங்கியதை அவர் சர்வதேச ஊடகங்களோடு  நினைவுக்கூர்ந்தார்.அந்த திகில் சம்பவத்தைச் சிகிம்ஃப்பின் மனைவியும், நிழற்படம் எடுப்பவரும் அதிர்ச்சியுடன் படகிலிருந்து கண்டிருக்கின்றனர். அந்த படங்களையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

No comments