ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சி.வி.கே சாட்டைடிய

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனால் ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்து எந்தளவுக்கு பேச முடியும் என்பது மிகப்பெரும் கேள்விக் குறி என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். 
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டம் தொடர்பாக சீ.வீ.கே.சிவஞானம் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இன்று அனுப்பி வைத்து ள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
இந்த கூட்டம் தொடர்பாக எமக்கும் ஏனைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்க ளுக்கும் தங்கள் செயலாளர் எழுதிய கடிதம் சார்பாக எமது அங்கத்தவர்களுடன் ஆரா யப்பட்டது.
தமிழ் இனத்தின் அக்கறைகள் தொடர்பாக இனிமேல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபையில் பேசவே முடியாது என்று பகிரங்கமாகவே இந்த நாட்டின் ஜனாதிபதி கூ றிவருகிறார்.
இந்நிலையில் அவரது பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட் டத்தில் கலந்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் தமிழர் நலன் சார்ந்து எந்த அ ளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகிறது.
எவ்வாறாயினும் தங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் எமது கருத்தை மிகச் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.
தமிழ் மக்களை பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணை யுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலினால் நிறைவேற்றப்பட்ட 201 5ஆம் ஆண்டின் 30/1 ஆம் இலக்கம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 தீர்மானங்கள் 
அப்படியே முழுமையாகவும் துரிதமாகவும் இலங்கை அரசாங்கம் அமுல் செய்வதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வலியுறுத்தி உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments