Header Shelvazug

http://shelvazug.com/

இராமேஸ்வரத்தில் கைதானோர் கடத்தல்காரரா?


தமிழ்நாட்டு இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் வைத்து பிளாஸ்ரிக் படகுடன் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்களே கைதாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இதே போன்று இலங்கை பிளாஸ்ரிக் படகொன்று மீட்கப்பட்டிருந்த போதும் அதில் பயணித்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

அதேபோன்று முல்லைதீவு கரைப்பகுதியில் ஆந்திர படகொன்றும் அண்மையில் ஆட்களற்ற நிலையில் கரை ஒதுங்கியிருந்தது.

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இவ்வாறான மீனவ படகுகளை பயன்படுத்துவதாகவும் அவை கைதுகளில் இருந்து தப்பிக்க அவற்றினை கரையோரங்களில் கைவிட்டு செல்வதாகவும் தெரியவருகின்றது. 

No comments