அரசிற்குக் குடை பிடித்து என்ன பயன் ?

தமிழ் மக்களின் நெஞ்சங்களை புண்படுத்தும் மோசமான செயலாகவே நாயாறு- நீராவியடி பகுதியில் புத் தா் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. என கூறியிருக்கும் முன்னாள் வடமாகாண எதிா்க்கட்சி தலைவா் சி.த வராசா, காலம் காலமாக தொல்பொருள் திணைக்களம் செய்த அபகாிப்பின் மற்றொரு பாிமாணமாகவும் இது அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

முல்லைத்தீவு நாயாறு நீராவியடி ஏற்றம் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டதுடன், அங்கு தமிழ் மக்கள் வழிபட தடையும் விதிக்கப்பட்டது. இது குறித்த விடயம் நீதிமன்றில் இருக்கும் நிலையில் நேற்று அவசர அவசரமாக புத்தர் சிலை திறக்கப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது செய்தி குறிப்பில் மேலும் தவராசா மேலும் கூறியுள்ளதாவது,

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட செயலானது தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலாகும்.

காலங் காலமாகத் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக விளவங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோயிலின் வளவிற்குள் இந்தப் புத்தர் சிலை அமைத்தமையானது தொல்பொருள் திணைக்களம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பின் இன்னோர் பரிமா ணமாகும். ஏற்கனவே இது தொடார்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஓர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பொலிசாரின் அனுசரணையுடன் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை ஏற்கனவே நொந்து போயிருக்கின்ற முல்லைத்தீவு மக்களிற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற ஓர் செயலாக அமைகின்றது.

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளால்தான் இன்று இந் நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதிகளா ல்தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இன்று பதவியில் உள்ளது. இவ்வாறான சூழலிலும் தொல்பொருள் திணைக்களம் இப்படியான செயல்களில் ஈடுபடுவதனை  தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாக இருந்து வேடிக்கை பார்க்காது அரசிற்கு அழுத்தம் கொடுத்து ஒரு சில அதிகாரிகளின் துவேசச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் ஓர் மதத்தைச் சார்ந்த சிறுதொகையினர் தன்னும் வாழ்வதாக இருந்தால் அவர்களின் மத வழிபாட்டுத் தேவைகளிற்காக கோயில்களை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் முகாம்களிற்குள் வாழும் படையினர் தவிர, பௌத்த சமயத்தைச் சார்ந்த எவரும் இல்லாத நாயாறு நீராவியடி ஏற்றப் பகுதியில், அதுவும் பபாரம்பரியமாக இருந்த ஓர் பிள்ளையார் சிலைக்கு சில மீற்றர் தூரத்தில், தொல் பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இவ்விடயம் நடந்தேறியிருப்பதானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

No comments