மஹிந்த, மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!


இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார், பொலிஸ் விசேட படையணி, கலகம் அடக்கும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புதிய அமைச்சரவைக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான எஸ்.பி. திசாநாயக்கவுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஆகியோருக்கு சனங்கள் ஒதுக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments