பாடசாலை தொடங்கியபின் விடுமுறை அறிவித்த வடக்கு ஆளுநர்


சீரற்ற வானிலை காரணமாக வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் இதனை உறுதிப்படுத்தினார்.

எனினும் காலை பாடசாலைகள் ஆரம்பித்த பின்பே விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியதால் மாணவர்களும் பெற்றோர்களும் சௌகரியங்களை எதிர்நோக்கியதைக் காண முடிந்தது. வடக்கு மாகாண பாடசாலைகள் காலை 07.30 மணிக்கு ஆரம்பித்திருந்தன. எனினும் காலை 08 மணிக்கே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கஜா புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் நேற்றரவு முதல் மழை பெய்துகொண்டிருந்தது. இதனை முன்கூட்டியே உணர்ந்து விடுமுறை அளிக்கத் தவறிய வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிவருகின்றன.

No comments