பெற்றோல் விலை குறைப்பு


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 140 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 167 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசலின் விலை ஒரு லிட்டர் 111 ரூபாவாகவும் ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றியிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (நேற்று) நள்ளிரவுகூட என்னால் பெற்றோலின் விலையைக் குறைக்க முடியும் என கூறியிருந்த நிலையிலேயே பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments