Header Shelvazug

http://shelvazug.com/

அடுத்து கோடீஸ்வரன்: கையோடு கூட்டி திரியும் சம்பந்தன்!


மஹிந்த தரப்புடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பாய்ச்சலில் ஈடுபடலாமென்ற அச்சம் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிடம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்து முதலில் பாயலாமென எதிர்பார்க்கப்படும் கோடீஸ்வரனை நேற்று வெள்ளிக்கிழமை முதல் தன்னுடனேயே இரா.சம்பந்தன் கூட்டித்திரிந்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றில் நடைபெற்ற தொடர்பற்ற பல கூட்டங்களிலும் சம்பந்தனுடன் கோடீஸ்வரன் அமர்ந்திருந்துள்ளார்.

நேற்றைய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் மஹிந்த பக்கம் பாய்ந்து செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் தொடர்பில் இரா.சம்பந்தன் திட்டிதீர்த்துள்ளார். அதிலும் சாள்ஸ் நிர்மலநாதன் மஹிந்த பக்கம் பாய்வது உறுதியாகியுள்ள நிலையில் அவரை அரசியலுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்து மாவை சேனாதிராசா மீது இரா.சம்பந்தன் பாய்ந்துவீழ்ந்துள்ளார். அப்போது பதிலளிக்காது மாவை சேனாதிராசா தலை குனிந்து அமர்ந்திருந்ததாக தெரியவருகின்றது.

இதேவேளை வியாழேந்திரன் பாய்வது தொடர்பில் தனக்கு இரண்டு நாட்களிற்கு முன்னரே தகவல் கிடைத்துவிட்டது உமக்கு தெரியாதாவென இரா.சம்பந்தன் சித்தார்த்தனிடம் சீறிப்பாய்ந்துள்ளார். வியாழேந்திரன் மஹிந்த பக்கம் செல்வதற்கு தன்னால் என்ன செய்ய முடியுமென சித்தார்த்தன் தெரிவிக்க இருவரும் நீண்டநேரம் காரசாரமாக வாதிட்டுள்ளனர். அப்போது இரா.சம்பந்தனுடன் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து கொண்டு சித்தார்த்தனை விமர்சித்ததாக தெரியவருகின்றது. 

இதனிடையே வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் மஹிந்த தரப்புடன் இணைவது தொடர்பில் தெரிவித்த கருத்து நகைச்சுவைக்காக பேசப்பட செய்தியாகியிருப்பதாக தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையிலிருந்த சிவசக்தி ஆனந்தனிடம் கேள்வி தொலைபேசி வழியே எழுப்பப்பட்ட போது நகைச்சுவையாகவே அதனை தெரிவித்ததாகவும் இதனை தெளிவுபடுத்தி பத்திரிகையாளர் சந்திப்பொன்றை இன்று சிவசக்தி ஆனந்தன் நடத்தவுள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் மஹிந்த பக்கம் பாய்வதென்ற  பேச்சுக்கேயிடமில்லையென தனது ஆதரவாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளாராம். அவ்வாறு மஹிந்த பக்கம் பாய்ந்து எனது அரசியலுக்கு சூனியம் செய்யப்போவதில்லையெனவும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.