நடுநிலையா ? சிறிதரன் மேல் பாய்ந்தனர் சுமந்தினும் சம்பந்தனும்


இனப்படுகொலையாளியான மகிந்தவிற்கும் ஆதரவளிக்கவேண்டாம் நல்லாட்சி என்ற பெயரில் எம்மை இதுவரை காலமும் ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவளிக்கவேண்டாம் நாங்கள் நடுநிலை வகிப்போம் என சிறிதரன்மேல் சுமந்தினும் சம்பந்தனும் பாய்ந்துவிழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் இன்றைய நிலமைகள் தொடர்பிலும் நேற்றைய தினம் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலமையில் கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தையும் தமது பகுதியில் உள்ள நிலைப்பாட்டின் அடிப்படையில் தீர்வினை எட்டுமாறுகோரி கருத்தினை முன் வைத்தனர். குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட மேற்படி கலந்துரையாடலில் போதே சிறிதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மகிந்த எமது மக்களை அழித்த துரோகி என்ற நிலை எனில் ரணிலும் நம்பவைத்து கழுத்தறுத்த துரோகியாகவே உள்ளார். எமக்கு வாக்குறுதகளை வழங்கிவிட்டு எம் மாவட்டங்களில் மேற்கொள்ளும் பணிகளை தமது அமைப்பாளர்கள் மூலமே முன்னெடுக்கின்றனர். அத்தோடு திட்டங்களின் காலத்தில் எம்மை கருத்தில் எடுக்காது ஆபத்து என்கின்றபோது மட்டுமே கவனம்கொள்வதனால் மூன்றாவது முடிவான நடுநிலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படலாம் என்றனர்.

இதன்போது சிறிதரன்மீதும் சாள்ஸ் மீதும் பாய்ந்து விழுந்த சுமந்திரனும் சம்பந்தனும் அவ்வாறு நடுநிலை எடுக்கும் முடிவு தவறானது எனவும் நாம் நடுநிலை வகித்து சொற்ப வாக்குகளால் மகிந்த அரயனையை கைப்பற்றினால் அதற்கும் நாமே உறுதுனை செய்தோம் என  எம்மை சர்வதேச சக்திகளும் இந்தியாவும் கடிந்துகெள்ளும் இது எமக்கு வரலாற்றுப் பழியை ஏற்படுத்தும் இந்த முடிவுக்கு ஒருவரும் போகவேண்டாம். எல்லோரும் கட்சிதாவாது பொறுமையாக இருங்கள் விரைவில் நாங்கள் நல்ல முடிவு அறிவிப்போம் என்றனர்.

No comments