நாலு நாள் இயங்கும் இலங்கை?
இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்;றைய தினம் இடம்பெற்ற அவசர கூட்ட தீர்மானப்பிரகாரம் வாரத்தின் புதன்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடிவிட அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி முடிவை எடுப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் மருத்துவமனை அமைப்பை பராமரிப்பதில் கடுமையான ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார சேவைகளின் தொடர்ச்சியைப் பேணுவதற்காக, மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்பிற்குள் மிகவும் நடைமுறை தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது தொலைதூர கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயினும் வாரத்தில் புதன்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடும் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளிற்கும் பொருந்துமென மற்றெர்ரு தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment