விஜயின் கட்சி தொடர்ந்து முன்னிலையில்: தி.மு.க.வுக்குப் பெரும் பின்னடைவு!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தோ்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கட்சி முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.
பல சுற்று வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தோல்வியடைந்தார் மற்றும் துணை முதல்வர் உதயநிதி வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்துள்ளார். வியகாந்த மனைவி பிரேமலதா வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-
த.வெ.க. - 107
தி.மு.க. - 72
அ.தி.மு.க. - 55
நா.த.க. - 00

Post a Comment