எளிமையிலும் எளிமையாம்!





அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை அரசு ஆடம்பர கொண்டாட்டங்களை நிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில்

கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16.03.2026) திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவின் இராஜ கிராமத்தில் அமைந்துள்ள கரவைச்சுடர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வு மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன்,

கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர்) சிறப்பு பங்கேற்புடன் நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மேலும்,

திரு. ச. கபிலன் – கிளீன் ஸ்ரீலங்கா திட்ட வடமாகாண இணைப்பாளர்

திரு. ப. கஜமுகன் – கிளீன் ஸ்ரீலங்கா திட்ட யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர்

திரு. பா. ஜெயகரன் – மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி)

திருமதி. ம. உமாமகள் – பிரதேச செயலாளர் (கரவெட்டி)

ஆகியோருடன்  கரவெட்டி பிரதேச சபை  தவிசாளர் கெளரவ குமாரசுவாமி சுரேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. ப. ஜெயகரன், பிரதம உள்ளகக் கணக்காளர் திரு.எஸ் ரமேஷ்குமார்,   உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி,   Clean Srilanka ஒருங்கிணைப்பாளர் திரு.T.திலீபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கணக்காளர், புள்ளிவிபர திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கரவெட்டி பிரதேச சபை செயலாளர், கரவெட்டி பிரதேச வைத்திய அதிகாரி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை  பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments