வியாழேந்திரனை மடக்கி கொடுத்த றோகித போகல்லாம?


தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து மஹிந்த பக்கம் பாய்ந்து அமைச்சராகியுள்ள வியாழேந்திரனை கிழக்கு மாகாண ஆளுநர் றோகித போகல்லாமாவே கொண்டு போய் சேர்த்ததாக தெரியவருகின்றது.

கனடாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த வியாழேந்திரனை அவரது வாகனத்தில் பயணம் செய்ய விடாது கிழக்கு மாகாண ஆளுநர் றோகித போகல்லா தனது மனவியின் வாகனத்தில் அழைத்து வந்து மஹிந்தவிடம் சேர்த்ததாக தெரியவருகின்றது.

கிழக்கில் தமிழரசு கட்சியினரால் தான் ஒதுக்கி செல்லப்படுவதாக கருதிய வியாழேந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் றோகித போகல்லாவுடன் நட்பினை பேணி தனது அரசியலை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவரை ஜக்கிய தேசியக்கட்சியில் இணைக்கவும் பேரம் நடந்திருந்தது.

எனினும் இறுதியில் தற்போதைய அரசியல் மாற்றத்தையடுத்து வியாழேந்திரனை மஹிந்த பக்கம் கிழக்கு மாகாண ஆளுநர் றோகித போகல்லாவ அழைத்து சென்று சேர்ப்பித்துள்ளார்.

ஏற்கனவே கிழக்கில் ரணிலின் தூண்டுதலில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவை இதேபோன்று இலங்கை அரசிடம் முஸ்லீம் அரசியல்வாதிகள் அழைத்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments