தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார் மகிந்த


தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதே தமது இலக்காகுமென்றும் நாட்டைப் பொருளாதார சுபீட்சமுள்ளதாக அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் கூறிய அவர், இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்ெகாண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்ெகாண்டார்.

விசேடமாகத் தமிழ் மக்கள் பொய்ப்பரப்புரைகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்கெடுத்துச் சுபீட்சமான சகவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்ெகாண்டார்.

No comments