நல்லாட்சியும் நல்லதில்லையென்கிறார் அஸ்மின் நானா?

சுமந்திரனை தொடர்ந்து நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கையிழந்து வருவதாக அவரது தொண்டர்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம், எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே, நாங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறதென, வடமாகாண சபை உறுப்பினர் அயூப்அஸ்மின் தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஐனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து அவரக்கு வாக்குக் கேட்டோம். ஆனால் அத்தீர்வை ஏற்படுத்துவதற்கு தற்போது தடையாக இருப்பவரே இந்த ஜனாதிபதி தான்.

“அவர் தன்னால் தனது கட்சி பாதிக்கப்படக்கூடாது என்பதால், தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே செயற்பட்டு வருகின்றார். இன்றைக்கு இருக்கின்ற ஜனாதிபதிக்கு தைரியம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொரு வெட்கமான விடயம் தான்.

“இந்த நாட்டில் மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டி இனவாதப் போக்குடனேயே அவர் நடக்கின்றார். அகவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்” என்றார்.

No comments