வெளியானது ஜஎஸ் தலைவரின் உரை! சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி!

தோல்விகள் ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து போராடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி அவர் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் ஊடக பிரிவு அல்பக்தாதியின் உரையடங்கிய ஓலிநாடாவை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓலிநாடாவிலேயே அல்பக்தாதியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

55 நிமிட உரையில் பக்தாதி சமீபத்தில் கனடாவிலும் ஐரோப்பாவிலும் தாக்குதல் சிங்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களை பாராட்டியுள்ள பக்தாதி தனது ஆதரவாளர்களை குண்டுகள் கத்திகள் கார்களை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஜாகிடீன்களை பொறுத்தவரை ஒரு நகரம் யார் கரங்களில் உள்ளது என்பதோ யாரிடம் விமானப்படையின் ஆதிக்கம் உள்ளது என்பதோ அல்லது யாரிடம் கண்டங்களிற்கு இடையிலான குண்டுகள் உள்ளது என்பதோ வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை எனவும் பக்தாதி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் ஆதரவாளர்கள் அல்லாவினால் பரிசோதிக்கப்படுகின்றனர் எனினும் தொடர்ந்தும் விசுவாசமாகயிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வீரர்கள் ஆண்டவன் வாக்குறுதியையும் அவரின் வெற்றியையும் நம்புகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கில் உள்ள தனது ஆதரவாளர்களை ஸியா முஸ்லீம்களிற்கு எதிரான  தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ள அல்பக்தாதி தனது ஆதரவாளர்களை அமைப்பின் தலைவர்களிற்கு விசுவாசமாக செயற்படுமாறும் கோரியுள்ளார்.

சவுதிஅரேபியா ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர்களை  பதவியிலிருந்து அகற்றுமாறும் அவர்  தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments