ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்ட களத்தில் பிக்குகளிடையே மோதல்!
அனுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளுக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது பிக்குகள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment