திருமாவளவனிடம் மகஜர்!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (21) சந்தித்துக் கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று முற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த எட்டு மாவட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொல். திருமாவளவனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Post a Comment