மாவீரர் நினைவு வளாகம் திறப்பு!

 


யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு வளாகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நினைவு வளாகத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் சுடரை ஏற்றி வைத்துத் திறந்து வைத்தார்.

மா*ரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

மா*வீரர் நாளை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் கே.கே.எஸ் பிரதான வீதியில் மா*வீரர் நாள் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிவப்பு மஞ்சள் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

No comments