செம்மணி புதைகுழி :நீளலாம்?





செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் செம்மணி மனித புதைகுழியின் பரப்பளவு மேலும் பெரிதாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.

இதுவரையிலான முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி உறுதிப்படுத்தியுள்ளார்.


No comments