மறுபயன்பாட்டு ரொக்கெட்டை சீனா வெற்றிகரமாக ஏவி மீண்டும் அதே தளத்தில் நிலை நிலைநிறுத்தியது!


மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், சீனா வெள்ளிக்கிழமை அன்று முதல் முறையாக சுற்றுப்பாதை வகை ராக்கெட்டின் உந்துவிசையை வெற்றிகரமாக மீட்டெடுத்தது.

தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச் 10பி ராக்கெட் வெள்ளிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு, ஒரு செயற்கைக்கோளை அதற்கென ஒதுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ராக்கெட்டின் மேல் நிலையிலிருந்து உந்துவிசை பிரிந்த சுமார் ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, அது கடலுக்குள் இருந்த ஒரு தளத்தை நோக்கி செங்குத்தாக இறங்கி, வலை அடிப்படையிலான மீட்பு அமைப்பு மூலம் பிடிக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் பயன்படுத்தும் ராக்கெட்டுகள் , விரிக்கக்கூடிய கால்களில் தானாகவே தரையிறங்குவதைப் போலல்லாமல், லாங் மார்ச் 10B ராக்கெட்டானது, கடல் தளத்திற்கு மேலே தொங்கவிடப்பட்ட ஒரு வலையைப் பிடிப்பதற்காக நான்கு கொக்கிகளைப் பயன்படுத்துகிறது.

இந்த அணுகுமுறை ராக்கெட்டின் உள் கட்டமைப்பை எளிமையாக்கி, அதன் எடையைக் குறைத்து, சுமந்து செல்லும் திறனை அதிகரிக்கக்கூடும் என்று சீனா ஏவுகணை வாகன தொழில்நுட்ப அக்கடமியின் நிபுணர் சென் முயே கூறினார்.

No comments