24 மணி நேரத்தில் ஈரான் மீது இரண்டாவது தாக்குதலை நடத்தியது அமெரிக்கா!


அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அறிவித்த 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா புதன்கிழமை இரவு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தது. இது இரண்டாவது கட்டத் தாக்குதலாகும். 

பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய தெற்கு துறைமுக நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள அபு மூசா தீவில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒலிபரப்பு நிறுவனமும் (IRIB) தெரிவித்துள்ளது .

ஈரானின் தெற்குக் கடற்கரையோரமாக மேலும் கிழக்கே அமைந்துள்ள சாபஹார் நகரில் உள்ள மருத்துவமனை மீது குண்டுகளின் சிதறல்கள் தாக்கியதாகவும் அது கூறியது.

புஷேர், சபாஹர், பந்தர் அப்பாஸ், சிரிக், ஜாஸ்க் மற்றும் அபு மூசா தீவு உள்ளிட்ட ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதி நகரங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களில் இரான்ஷாஹர் நகரில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு, சாபஹாரில் பரவலான மின்சாரத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

கோலெஸ்தான் மாகாணத்தில் உள்ள அக்காலா நகருக்கு வெளியே அமைந்துள்ள ரயில்வே பாலம் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் (புதன்கிழமை 22:00 GMT) அக் தெக்கே கான் பாலத்தை நோக்கி ஏழு எதிரி குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் இரண்டு ரயில் தண்டவாளத்தில் வெடிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அது தெரிவித்தது.

No comments