சதிகளிற்கு எதிராக விழிப்புணர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டணம் செலுத்தி அழைத்துவரப்படும் கும்பல்களின் போராட்டங்கள் மக்கள் போராட்டங்களை கேள்விக்குள்ளாக்கிவருகி;ன்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைக் காலந்தாழ்த்தாது, உடனடியாகத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று அழைத்துவரப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
"பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்" எனும் பெயரிலான புதிய அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டத்தில், பல்கலைக்கழக மட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் எவ்வித இழுத்தடிப்புகளுமின்றி நேர்மையான முறையில் மிக விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்டத்திற்கு வெளியே மன்னார் புத்தளம் மற்றும் நீர்கொழும்பு என பல பகுதிகளிலிருந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இதனிடையே குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலை மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருகிறதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சட்டரீதியாகக் குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்காது, சமூக ஊடகப் பரப்பினூடாக அவமதிப்பை உருவாக்கும் பிம்பங்களைக் கட்டமைத்து, சமூக ஊடகப் பதிவர்களே நீதிபதிகளாக உருவாகும் துரதிரதிஸ்டவசமான நிலை தமிழ்ச்சமூகத்தின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மாறானதும் எதிரானதுமாகும்.
வெறுமனே மானுட உணர்வுகளைக் கிளறிக் குளிர்காய முற்படும் இந்தத் தீயசக்திகளை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளங் கண்டுள்ளதுடன், அதுபற்றிய தெளிவுகளை சமூகத்தின்முன் கொண்டுசெல்லும் முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தருவார்கள்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று (09.07.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பதையும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுடன் முன்னெடுக்கப்படுவவை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டிகாட்டுகின்றது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment