அருச்சுனா நல்லம் இல்லையாம்!





நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அர்ச்சுனாவின் அத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் காணிகளை மோசடி முறையில் வழங்கியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

அதனால் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானது.

 அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில் தொடர்ந்து பிரதேச சபை தவிசாளர்கள் என பலரும் தொடர்ந்து வெளியேறியிருந்தனர். 

அதனை தொடர்ந்து கூட்டத்துக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில்சென்று அவரை கூட்டத்திலிருந்து வெளியே செல்ல அமைதியாக அறிவித்திருந்தார்.. அதற்கு அர்ச்சுனா செவிமடுக்காமையால், அமைச்சர் சந்திரசேகரன்  வெளியே போவென கடுந்தொனியில் சந்தமிட்டு, மேசையில் இருந்த பொருளொன்றை கையிலெடுத்தார்.

அப்போது எழுந்த அர்ச்சுனா, என்னை யாரும் வெளியே போகசொல்ல முடியாது என தானும் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். எனினும், அங்கிருந்தவர்கள், அர்ச்சுனாவை பிடித்துக்கொண்டனர். அமைச்சர் தனது ஆசனத்துக்கே திரும்பிவிட்டார். 

அதன் தொடர்ச்சியாக திகதி அறிவிக்கப்படாது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments