வெளியே வந்தார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!



குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை இரத்து செய்யுமாறு கோரி, கொழும்பு பேராயர் மல்கம்  ரஞ்சித் ஆண்டகை குறுக்கீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சாலே தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்னிலையில், எதிர்வரும் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான முக்கிய சூத்திரதாரியான அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலேயை விடுவிக்க மகிந்த கும்பல் பகீரத பிரயத்தனங்களை முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறுக்கீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. 


No comments