420 இனை தாண்டுகின்றது!
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் 34 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றும் சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 400 ஐ கடந்துள்ள நிலையில் 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே செம்மணி புதைகுழி காலப்பகுதி தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவியே வருகின்றது.
1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட போது வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்த நிலையில் கடல்வழியாக திரும்பியிருந்த குடும்பங்களேயெ சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மறுதரப்போ இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த குடும்பங்களினுடையதென வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment