கோத்தாவை காணோம்!

 



முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் நிதியில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் தமிழன் நாளிதழின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமையையும் சமூகப் பொறுப்பையும் முன்னிறுத்தி பணியாற்றிய ஊடகவியலாளர்களை கொன்று குவிப்பதில் முக்கிய பங்கை கோத்தா முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழன் நிறுவன நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் கைதாகவுள்ளவருமான ரணில் பங்கெடுத்திருந்தார்.எனினும் கோத்தபாயவோ மகிந்த குடும்பத்தவர்களோ பங்கெடுத்திருக்கவில்லை.

ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமான, பொறுப்புணர்வுள்ள ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். குறிப்பாக தமிழ் மக்களின் குரலையும், அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளையும் தொடர்ச்சியாக வெளிக்கொணரும் ஊடகங்களின் பணி மிகவும் பெறுமதியானது.

ஆறு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் ஊடகச் சேவையாற்றி வரும் தமிழன் நாளிதழின் நிர்வாகம், ஆசிரியர் குழு மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக பங்கெடுத்தவர்களுள் ஒருவரான சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


No comments