காங்கேசன்துறை –திருமலைக்கு இந்திய சரக்கு கப்பல்!



பயணிகள் போக்குவரத்து சேவையினை தொடர்ந்து இந்தியாவின்  காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை  துறைமுகங்களையும் இணைக்கும் புதிய  சரக்கு கப்பல் சேவை  2026 செப்ரெம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த சேவையை சென்னையை சேர்ந்த நிறுவனம் அதன் இலங்கை முகவர் மூலம் இயக்கவுள்ளது.

வாரந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட கப்பல் சேவையுடன் 1,600 மெட்ரிக் தொன் சரக்கு கப்பல் பயன்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் வெளியிட்ட தற்காலிக அட்டவணையின்படி   2026 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காரைக்காலிலிருந்து வாரந்தோறும் புறப்படும் கப்பல் சேவையில் 2026 டிசம்பர் இறுதி வரை தொடர்ச்சியான பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு இலங்கைக்கான இறக்குமதி, ஏற்றுமதி யையும் கொழும்பு துறைமுகத்தை மட்டும் சார்ந்திருக்கும் நிலை ஓரளவு குறையலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வணிகர்களுக்கு இந்தியாவுடன் நேரடி கடல் சரக்கு இணைப்பு கிடைக்கும்.

எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தின் வர்த்தக முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


No comments