சோற்றுக்கடன்: துடிக்கிறார் குலநாயகம்!



தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றதென தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர் குலநாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தமிழரசுக் கட்சிக்கென்று ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும் உள்ளன. கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது.

மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டும்.முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு கட்சி சின்னாபின்னமாக்க இடமளிக்கக் கூடாதென தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர் குலநாயகம் தெரிவித்துள்ளார்.


No comments