கோத்தாவிற்கு தடை:சாலேவிற்கு தற்கொலை மனோநிலை!



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களிலிருந்து எழும் விடயங்கள் குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாகவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை பரிசீலித்த நீதவான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ கேர்னல் முஹம்மது அன்சார் ஆகியோருடன் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஸ் சலே, மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனச்சோர்வு, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு மற்றும் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்று, சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேக நபர் ஐந்து இடங்களில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாக அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்;.

இதன் விளைவாக சந்தேக நபரான சுரேஸ் சலே உயிரை மாய்த்துக்கொள்ளும் அதிக அபாயத்தில் இருப்பதாக மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


No comments