செம்மணி - இறுதி யுத்த புதைகுழியா? வலுக்கும் சந்தேகம்!



செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மொத்தமாக இதுவரை 275 எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 15ஆம் நாள் பணிகளின்போது, இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அவ்வகையில் சேர்த்து மூன்று கட்டங்களிலும் இதுவரை மொத்தம் 275 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 272 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வில் சில குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் போது ஒன்றன் மீது ஒன்றாக போடப்பட்ட நிலையில் இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

257 வது மற்றும் 258 வது என்பு கூடுகளே ஒன்றன் மீது ஒன்றாக போடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

அவற்றில் ஒரு என்பு கூட்டு தொகுதியின் தலை பகுதி மற்றொரு என்பு கூட்டு தொகுதியின் கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை அகழ்வு பகுதியில் குவியலாக என்பு கூடுகள் காணப்படும் நிலையில் அவை இலக்கமிடப்படவில்லை. மண் படைகள் அகற்றப்படும் போது அவை பற்றிய விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments