மின்னேரியாவில் சடலமாக செயற்பாட்டாளர்!
வவுனியாவைச் சேர்ந்த முன்னணி சமூக செயற்பாட்டாளரும் இளம் ஆசிரியரையுமான ஒருவர் மின்னேரியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த ஒருவரே மின்னேரியாவில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அவரது மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கலை இலக்கிய வட்டாரங்களில் தீவிரமாக இயங்கிவந்ததுடன் ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும், குறிப்பாக திருகோணலை பிரகடனம் உள்ளிட்ட சமூக மாநாடுகளிலும் ஒரு முக்கிய பேச்சாளராகவும் செயல்பாட்டாளராகவும் பங்கெடுத்திருந்தார்.
மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் மருத்துவ அறிக்கை மற்றும் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணைகளை நகர்த்தி வருகின்றனர்.

Post a Comment