கிட்ட வந்தது கிபுல் ஓயா திட்டம்!

 


கிபுல் ஓயாத்திட்டத்திற்காக அபகரிக்கப்படும் தமிழர்வாழ்  பிரதேசங்களில் உள்ள பதினைந்தாயிரம் ஏக்கர் பெருங்காடுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சரத்சந்திர தீவிர முயற்சி எடுத்துவருவதாக சமூக செயற்பாட்டாளர் தவபாலன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவசரக்கூட்டமொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதே வனஇலா திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காணி சார் அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஊடகங்களுக்கு செய்திகள் கசிய விடப்படவில்லை எனவும் இது தொடர்பான இறுதி முடிவினை உறுதிப்படுத்தும் கூட்டமொன்று எதிர்வரும் 22/23(செவ்வாய், புதன்) திகதிகளில் நடாத்த ஏற்படாகி உள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த காடுகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டு செல்லப்பட்டு பிரதேச செயலகங்களின் கீழுள்ள அதிகாரங்களை இல்லாமல் செய்து கிபுல் ஓயாத்திட்டத்தின் மீதான எதிர்ப்புகளின் அல்லது அதற்கு எதிரான பிரச்சினையின் வீரியத்தை/தாக்கத்தை குறைப்பதற்காக இச்செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவருகிறது.

மறுபுறம் கிபுல் ஓயாத்திட்டத்தின் இலகு படுத்தலுக்காக மருதோடை உள்ளிட்ட நான்கு/மூன்று  கிராம அலுவலர் பிரிவுகளை வவுனியா வடக்குப்பிரதேச செயலகத்திலிருந்து நீக்கி வெலிஓயாவுடன் இணைப்பதற்கான முயற்சிகளும் திரைமறைவில் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. 

கிபுல்ஓயாத் திட்டம் என்ற பெயரில் பட்டிக்குடியிருப்பு, கற்குளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சற்கட்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் மகாவலி ஆக்கிரமிப்பிலும், ஒலுமடு கிராமமானது வெடுக்குநாறி மலை பௌத்த ஆக்கிரமிப்பிலும் நகர்ந்தால் குறைந்தது ஐந்து வருடங்களுக்குள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நெடுங்கேணி சந்தியை தொடும் தூரத்தில் என்பதை மறந்துவிடாதீர்கள் சமூக செயற்பாட்டாளர் தவபாலன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்துபோக இது சாதாரண நிகழ்ச்சி நிரலல்ல

தொண்ணூற்று ஐந்து  வீதம்(95%) தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்தில் ஒரு சிங்கள அதிகாரியை மாவட்ட அரசாங்க அதிபராகவும்

தொண்ணூற்று எட்டுவீதம்(98%) தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியா வடக்கிற்கு ஒரு சிங்களப்பெண்மணியை பிரதேச செயலாளராகவும் ஏன் நியமித்திருக்கிறார்கள் 

என்ற சந்தேகம் இப்போது உங்களுக்கு  எழுந்தால் 

இதறையும் வாசியுங்கள்..

1980க்குப்பின்னர் இந்த நாற்பத்து ஆறு(46) ஆண்டுகளில் திருகோணமலையை பௌத்தம் எப்படி ஆக்கிரமித்தது என்பதையும் அங்கு கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சட்ட விரோத பௌத்த விகாரைகளையும் சில இரவுகளில் சிங்களமாக மாறிய வீதிகளின் பெயர்களையும் பெயர்ப்பலகைகளையும் மட்டும் நினைவுபடுத்தாது திருமலையில் பெரும்பான்மையாக  எண்பது வீதமாக(80%) இருந்த  தமிழர்கள் எப்படி முப்பது(30%) வீதமாக்கப்பட்டார்கள் என்பதையும் அங்கும் வவுனியா மாவட்டத்தைப் போன்று மாவட்ட, பிரதேச செயலகங்களின்  அதிகாரிகள் சிங்கள இனத்தைச்சார்ந்தவர்களே பல ஆண்டுகள் கடமைக்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள்

No comments