திட்டமிடப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது வெண்கல உருவச்சிலை வைக்கப்பட்டு இன்று முதல் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தியாகதீபம் திழூலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நல்லூரில் உணர்வுபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது வெண்கல உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, தியாகதீபம் திலீபன் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக நல்லூர் வீதியில் நீராகாரமும் இன்றி சொட்டு நீரும் அருந்தாமல் தியாகதீபம் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இவரது நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
சிறைக்கூடங்களிலும், இராணுவ மற்றும் காவற்துறைத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென்பது உள்ளிட்ட ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தே திலீபன் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment